தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. முன்னாள் தேசிய தலைவர் சயீத் சாஹிப் அவர்களின் நினைவுதின உறுதியேற்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் SDPI கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு சமூக தளங்களில் பயணித்து, இந்தியா முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வளர்ச்சியினை கொண்டு சென்ற சிறந்த ஆளுமையாக திகழ்ந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் எ.சயீத் சாகிப் அவர்களின் நினைவு தினமான ஏப்.02 இன்று, ‘சயீத் சாஹிப் ஓர் சகாப்தம்’ என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்வீரர்கள் உறுதியேற்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் நகரம் சார்பாக நடைபெற்றது.
நகர செயலாளர் அ.ரஜப் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுசெயலாளர் N.M. சேக்தாவூது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.அஹ்மத் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சயீத் சாகிப் நினைவு கூரும் விதமாக அவர்களின் உறுதி ஏற்க்கும் ஓலையை A.அகமது வாசிக்க நிர்வாகிகள் அனைவரும் நெஞ்சிலேந்து உறுதி மொழி ஏற்க்கப்பட்டது.
சிறந்த எழுத்தாளர், மனித உரிமைப் போராளி, அரசியல் தலைவர் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆளுமைத் தன்மைகளை தன்னகத்தே கொண்டவரும், சமகாலப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை முன்வைத்த சயீத் சாகிப் அவர்களின் நினைவு தினத்தில் அவரின் சிந்தனைகளை அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.