அதிரை 6வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கனீஸ் பாத்திமா காமில். வார்டில் மேற்கொள்ளப்படும் பணிகளை தனது கணவரின் மூலம் கண்காணித்து வருகிறார். அதன்படி தற்போது அந்த வார்டில் நடைபெற்று வரும் தார்சாலை பணியை முன்னின்று கவனித்து வரும் இவர், அரசு விதிகளின்படி பழைய சாலையை தோண்டி எடுத்துவிட்டு புதிய சாலையை அமைக்குமாறு ஒப்பந்ததாரரை வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அவ்வாறு எடுக்கப்பட்ட பழைய ஜல்லி கற்களை வாய்க்கால் தெரு பள்ளியில் நீர்தேங்க கூடிய இடங்களில் கொட்டி நிரப்பி அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் முன்மாதிரியாக மாறியிருக்கிறார்.அதிரையில் எந்த கவுன்சிலரும் செய்ய துணியாததை துணிந்து செய்யும் கனீஸ் பாத்திமா காமில் எதிர்காலத்தில் அதிரை நகர்மன்ற தலைவரானால் எப்படி இருக்கும் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். காரணம் மறைந்த திமுக முன்னோடியும் முன்னாள் கவுன்சிலருமான (கோழி) காதரின் மூன்றாவது மகன் தான் கவுன்சிலர் கனீஸ் பாத்திமாவின் கணவர் காமில்.
2011ம் ஆண்டு அதிரை பேரூராட்சி துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்ட காதர் எதிர்பாராத விதமாக வெற்றிவாய்ப்பை இழந்தார். இதனிடையே அவர் மரணமடைந்ததால் 2022ம் ஆண்டு நகராட்சி தேர்தலில் அவரது மருமகளுக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போதே கனீஸ் பாத்திமாவுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்படும் என பேசப்பட்ட சூழலில் இந்தமுறை அவருக்கான வாய்ப்பு கைநழுவி போனது.
முன்னதாக தலைமுறைகள் கடந்து திமுக சீனியர் பட்டியலில் முன்னாள் ஒன்றிய பொருளாளர் ஜெக்கரியாவின் பேரன் NKS.சரீப்பின் பெயர் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.