803
அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி ரமலான் பிறை 01முதல் பிறை 15வரை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று கேள்விகளுக்கான பதில்களை பதிவு செய்தனர். இதனையடுத்து நடைபெற்ற விடை திருத்தல் பணி முடிவடைந்து வெற்றியாளர்கள் பட்டியல் தயாராகிவிட்டதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான பரிசளிப்பு விழாவை ஒருங்கிணைக்கும் பணியை அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் மேற்கொண்டு வரும் சூழலில் விரைவில் விழா நடைபெறும் இடம் மற்றும் தேதி அறிவிக்கப்படும் என்றும் அதில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளனர்.