முஸல்லாக்கள் ஏங்குகின்றன
முஸ்லிம்கள் ரமலானுக்குப் பின்
முடங்கி விட்டனரா?
தஸ்பீஹ் மணிகள் தவமிருக்கின்றன
தன்னைத் தடவும் கரங்கள்
தடம் மாறி விட்டனவா?
இமாம்களின் குரல்கள் ஏமாற்றம் அடைந்தன “ஸஃப்களைச் சரி செய்யுங்கள்” சொல்ல முடியாத கவலையிலா?
குர் ஆன் கூப்பிடுகிறது
குறித்து வைத்து ஓதிய
கூட்டங்கள் எங்கே?
இறையவனை ஏமாற்றி விட்டதாக
இறுமாப்புக் கொள்ளாதே
இரும்பு மனம் கொண்ட மனிதா?
உன்னையே நீ ஏமாற்றிக் கொண்டதை உணரவில்லை எளிதாய்!
தங்கங்கள் எவை?
தகரங்கள் எவை?
காட்சிப் படுத்தும் காட்சி இஃதே!
ஆக்கம் #கவியன்பன்_கலாம்