131
சமூக விழிப்புணர்வின்
ஒரு நெம்புகோல்
கவியாட்சியின்
செங்கோல்!
ஒற்றை நாவாய் வந்து
உலகத்தைப் பாடும்
பழுதுபட்டுப்
பாழடைந்த உள்ளங்கள்
எழுதுகோலின்
மொழி விளக்கொளியால்
விழிக்கட்டும்!
பென்சில் முள்ளில்
தானாய் வந்து விழும்
மலர்களைக் கோத்து
மணம் வீச வைப்பீர்!
உதிரும் உறவுகளில்
உதிராத ஓர் உன்னத
வாடா மலராக
வார்த்தைகள் மலரும்!
பென்சில் கூர்”மை”
உண்மை
ஊற்றப்பட்டுத்
திண்மையைப்
பேசிடும் தன்மை!
மதத்தைக் கீறாத
பதமான மனிதநேய
இதமானவைகளாய்
இருக்கட்டும்!
-கவியன்பன் கலாம்,