Home » படிப்பில்வேண்டும்பிடிப்பு

படிப்பில்வேண்டும்பிடிப்பு

0 comment

மூச்சு விடுதல் மட்டு மன்று

 முயற்சி கூட மனிதமே

பேச்சில் கூறு மனைத்தும் விடாமல்

  பேணிக் காத்தல் மனிதமே

பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று

   பயிரும் வளர்தல் போலவும்

காய்ச்சும் தங்கம் ஒளிர்தல் போன்றும்

  கடின வுழைப்பு வெல்லுமே

ஊதும் சங்கின் அறிவிப் பால்நம்

  உறக்கம் களையச் செய்யுமே

ஓதும் உன்றன் படிப்பால் செல்வம்

   ஓங்கி வளரச் செய்யுமே

தீதும் நன்றும் பகுத்து முடிவைத்

  தீர்க்க வுதவும் கல்வியே

போது மென்ற நிறுத்தல் குறியைப்

  போட்டு விடாது கல்வியே

மின்வெட்டுச் சோதனையால் மிரள வேண்டா

   மிச்சமுள்ள நேரத்தில் பிறழ வேண்டா

முன்சென்றத் தலைவர்கள் கல்வி தேட

  முடங்கித்தான் போகாமல் வெற்றிச் சூட

பின்பற்றி(ய) வழிகளையும் நீயே நோக்கு

  பிற்காலம் கல்வியினா லேழ்மை போக்கும்

உன்சுற்றம் உனைச்சுற்றும் நட்பும் நீளும்

  உலகமெலாம் உனைநோக்கும் காலம் சூழும்


”கவியன்பன்” கலாம்,

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter