898
அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. புதுமனை தெருவில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு மண்டபத்தில் சனிக்கிழமை காலை 9.30மணிக்கு நடைபெற கூடிய இந்த முகாமில் பட்டுக்கோட்டை துணை வட்டாட்சியர் முனைவர். கா.தர்மேந்திரா, தலைமை ஆசிரியர் முனைவர். எஃப்.சாகுல் ஹமீது, தமிழ்நாடு அரசு தலைமைச்செயலக பிரிவு நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அலுவலர் எம்.சசிகுமார் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர். இந்த கல்வி வழிகாட்டுதல் முகாமை மாணவர்களும் பெற்றோர்களும் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு பயனடைய வேண்டும் என சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.