அதிரை வண்டிபேட்டை முதல் மெயின் ரோடு வரையில் சாலை விரிவாக்க பணிக்காக மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை தேவைப்படும் சமயத்தில் அவ்வபோது மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை செய்யப்பட்ட மின் தடை அறிவிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து இரவு வரை நீண்டதால் வெகுந்தெழுந்த மக்கள், மின் ஊழியர்கள் பணி செய்துக்கொண்டிருந்த பழஞ்செட்டி தெரு பேருந்து நிறுத்தம் அருகே திரண்டனர். அப்போது அங்கு வந்த உதவி செயற்பொறியாளர் சர்மா, நிலமையை எடுத்துக்கூறி மக்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். மக்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவரால் தெளிவான பதில் அளிக்க முடியவில்லை. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தகவலறிந்து வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட முயன்ற மக்களை சமரசம் செய்து மறியல் முடிவை கைவிட செய்தனர். இருப்பினும் அப்பகுதியில் தொடந்து பதற்றம் நிலவியது.
Big breaking: இருளில் தத்தளித்த அதிரை! சாலையில் திரண்ட மக்கள் கூட்டம்!! அனல்பறந்த வாக்குவாதம்!
2.1k