கடந்த ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி நடத்தப்பட்டது. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள் உட்பட 33 பேர் பரிசுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை பாராட்டி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் துணை தலைவரும் ராமநாதபுரம் எம்.பியுமான நவாஸ்கனி பாராட்டு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதங்களை அதிரை எக்ஸ்பிரஸ் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஜாஹிர் உசேனிடம் முஸ்லீம் லீக் நகர செயலாளர் வழக்கறிஞர் முனாஃப் ஒப்படைத்தார். அப்போது நகர துணை தலைவர் வழக்கறிஞர் முகம்மது தம்பி, மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது, ஐடி விங் பொறுப்பாளர் ஹசன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த பாராட்டு கடிதங்கள் விரைவில் நடைபெற இருக்கும் பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
அதிரை எக்ஸ்பிரசிடம் நாடாளுமன்ற உறுப்பினரின் பாராட்டு கடிதங்கள் ஒப்படைப்பு!! மிக விரைவில் பரிசளிப்பு!
712