Home » அதிரையில் உள்ள 5 பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

அதிரையில் உள்ள 5 பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

by அதிரை இடி
0 comment

தமிழ் நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் அதிரை கரையூர் தெரு அரசு மேல்நிலை பள்ளி (18பேர்) மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி (67பேர்) ஆகியவை 100% மாணவ மாணவிகளை தேர்ச்சி பெற செய்துள்ளன.

அடுத்ததாக காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி (மொத்தம் 158 தேர்ச்சி 153பேர்) மற்றும் அரசினர் மேல்நிலை பள்ளி (மொத்தம் 108 தேர்ச்சி 105பேர்) சார்ந்த சார்ந்த மாணவிகள் 97% தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

அதேசமயம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை தேர்வு எழுதிய 164 பேரில் 128 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதன் மூலம் அந்த பள்ளி 78% தேர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 61% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றது குறிப்பிடத்தக்கது.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter