அதிரை ஃபிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் AFCC சார்பாக 17 வயதிற்குட்பட்டோருக்கான Under 17 கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கியது. அதிராம்பட்டினம் அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் மொத்தம் 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
முன்னதாக இந்த Under 17 கிரிக்கெட் தொடரை AFWA ன் துணைச்செயலாளர் அஹமது அனஸ், AFCC அணியின் நிர்வாகத் தலைவர் கிஜார், AFFA அணியின் முன்னாள் வீரர் சேக் தம்பி ஆகியோர் இத்தொடர் போட்டியை துவக்கி வைத்தனர்.
முதல் போட்டியில் அதிரை AFCC – SFCC சிட்னி அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற அதிரை AFCC அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழந்து 143 ரன்கள் எடுத்தது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய அதிரை SFCC சிட்னி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியதால் AFCC அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

