1.1K
கோவில் காவடியில் இஸ்லாமியர்கள் வழங்கிய நீர்மோர் – சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு !அதிராம்பட்டினத்தில் பிரித்தி பெற்ற கரையூர் தெரு மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பால்காவடி எடுத்து அம்மனை தரிசிப்பது வழக்கம் அவ்வகையில் இந்தாண்டும் பால்காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி என பக்தர்கள் வழிபாடு நடத்துவர்.அதன்படி கிராமம் வாரியாக இன்று காலை முதல் காவடி தூக்கி கோவிலுக்கு வருகிறார்கள்.சுட்டெரிக்கும் கோடை வெயிலினால் களைப்படையும் பக்தர்கள்,காவடி ஆடுபவர்களுக்கு குளிர்ந்த நீர் மோர் வழங்கி இஸ்லாமியர்கள் வரவேற்றனர்.சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது என பக்தர்கள்,வியாபாரிகள் வாழ்த்தினர்.