Home » அதிரை அரசு மருத்துவமனையில், முதன் முதலாக குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து சாதனை !

அதிரை அரசு மருத்துவமனையில், முதன் முதலாக குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து சாதனை !

by Admin
0 comment

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகர் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது45). இவர் கடந்த 3 மாதங்களாக குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்தார்.

இதனையடுத்து அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் நியூட்டன் ஆலோசனையின்படி உடல் பரிசோதனை செய்து வந்துள்ளார். இருந்தபோதும் குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டாக்டர் நியூட்டன் தலைமையிலான மருத்துவ குழுவினரான அறுவை சிகிச்சை நிபுணர் பிரசன்னா, மயக்க மருந்து நிபுணர்.டாக்டர்.ஹக்கீம், மருத்துவ சேவைகள் இணை இயக்குனர் டாக்டர் திலகம் ஆகியோர் இணைந்து குடல் இறக்க அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினால் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter