600
இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் SSM குல்முகம்மது நினைவு எழுவர் கால்பந்து தொடர் போட்டி ஆண்டுதோறும் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல்முகம்மது நினைவு 23ம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி இன்று 09/06/2023 மாலை தொடங்குவதாக இருந்தது.
மாநில, தேசிய அளவிலான பல்வேறு அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடர் போட்டி, சமீபத்தில் பெய்த மழை காரணமாக இன்று தொடங்காமல், வருகிற 12/06/2023 திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் தொடங்கும் என கால்பந்து கழக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.