Home » அதிரையில் நூதன கொள்ளையர்கள் உஷார் உஷார்!!!

அதிரையில் நூதன கொள்ளையர்கள் உஷார் உஷார்!!!

by admin
116 comments

 அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையில் நூதன முறையில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றும் திருடர்கள்.
அதிரையில் இயங்க கூடிய ATM களில் பணம் எடுக்க தெரியாதவர்களிடம் உதவி செய்வதைப் போல் பணமும் எடுத்து கொடுத்து விடுகின்றனர்.

பணம் எடுத்து கேட்டவரிடம் கார்டும் ஒப்படைத்துவிடுகின்றனர்.
இங்கு தான் உஷாராக இருக்க வேண்டும் பணம் எடுத்து கேட்பவர் முன் பின் தெரியாத அந்த நபரிடம் கொடுக்கும்போது அவரும் நம்முடைய ATM கார்டை வாங்கி ரகசிய குறியீடு எண்ணையும் பெற்று பணம் எடுக்கின்ற இந்த நேரத்தில் தான் சற்றும் எதிர்பார்த்திராத நேரத்தில் நம்முடைய ATM கார்டுக்கு பதிலாக வேறொரு கார்டு கொடுக்கப்பட்டு விடுகிறது.இதனால் நாம் எதும் நடைபெறவில்லை என்று திரும்பி விடுகிறோம்.
அந்த திருடன் வைத்திருக்கும் கார்டும்,நம்முடைய ரகசிய எண்ணையும் வைத்துக்கொண்டு நம்முடைய கணக்கில் உள்ள பணத்தை நூதன முறையில் திருடிவிடுகின்றனர.வங்கியில் பணம் எடுத்தாலோ அல்லது பணம் செலுத்தினாலோ வங்கியில் அனுப்பும் குறுஞ்செய்தி பதிவு செய்யாவிட்டால் நமக்கு பணம் எடுத்ததும் தெரியாமல் மொத்த சேமிப்பு தொகையும் சுருட்டி விடுகிறார்கள்.
ஆகவே பேங்க்,ATM போன்ற மையங்களில் செல்லும்போது அசால்டாக இல்லாமல் உஷாராக இருக்கவேண்டும்.மேலும் போன்களிலும் நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம் என்கிற ரீதியிலும் கொள்ளையடிக்கிறார்கள் ஆகவே சற்று விழித்து இழந்துவிடாமல்,பாதுகாத்துக் கொள்ளுங்கள்!!!!

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter