அதிராம்பட்டினம் 13வது வார்டுக்கு உட்பட்ட கடைதெரு கிராணி முக்கம் அருகே சாக்கடை நீரும், மழை நீரும் கலந்து ரோட்டை சூழ்ந்திருந்தன, இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் முகநூலில் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அதிரை எக்ஸ்பிரஸ் காணொளியுடன் செய்தியாக வெளியிட்டது காட்டுத்தீ போல பரவியது. இந்த செய்தி அதிகார மட்டத்தின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதன் பின் சுதாரித்த 13வது வார்டு கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் நகராட்சிக்கு புகார் தெரிவித்திருக்கிறார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு, வார்டு பொறுப்பாளர் அஸ்லம் மற்றும் நகராட்சி ஆணையர் மற்றும் SDPI கட்சியினர் துணை சேர்மன் இராம குணசேகரன் உத்தரவின் பேரில் நாளை காலை தற்காலிகமாக சாலையை சரி செய்து தருவதுடன், விரைவில் முறையாக டெண்டர் வைக்கப்பட்டு வடிகால் உள்ளிட்ட சாலை வசதிகளை ஏற்படுத்த உள்ளதாக அஸ்லம் தெரிவித்தார்.