
உலகளவில் வியாப்பித்து இருக்கும் அதிரையர்கள் தங்களது வேலை நேரம் போக மீதமுள்ள நேரங்களில் தமது நாட்டு நலன் குறிப்பாக ஊரின் நலன் குறித்து அக்கரை கொண்டு தங்கல் வாழும் நாடுகளில் சிறிய அமைப்புகளை உருவாக்கி நல்லறங்களை செய்து வருகிறார்கள்.
அதன்படி அமெரிக்க வாழ் அதிரை மக்கள் அமெரிக்க அதிரையர் மன்றம் சிறப்பாக பல்வேறு நலத்திட்டங்களில் ஈடுபடுத்தி வருகிறார்கள்.
அதன்படி பழைய நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய நிர்வாகத் தேர்வினை தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்ட ஷிப்லி தலைமையில் நடைபெற்றது அதில் பின்வரும் புதிய நிர்வாகிகள் தேர்வாகி உள்ளனர்.
தலைவராக ஷேக் அப்துல்காதர் (ஃப்ரிமொளண்ட்) அவர்களும், துணைத்தலைவராக அஹ்மது ஜப்ரீன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
செயலாளராக அப்துல் கறிம் இணைச் செயலாளராக அகமது அமீன் (ஃபேர் ஃபில்டு) மற்றும் பொருளாளராக அகமது அமீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக நிதிநிலை அறிக்கையை முன்னாள் பொருளாளர் அப்துல் ரவூஃப் வாசித்தார்.
அதிரை நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரையுடன் காணொளி காட்சி மூலமாக கோரிக்கை விடுத்தனர்.