48 பேருக்கு கட்டணமில்லா அறுவை சிகிச்சை! !
அதிரை லயன்ஸ் ஹான்ஸ்ட் சங்கத்தின் இலவச கண் மருத்துவ முகாம் – நூற்று கணக்கான கண் நோயாளிகள் பயணடைந்தனர் !
அதிராம்பட்டினம் லயன்ஸ் ஹான்ஸ்ட் சங்கத்தின் சார்பில் திருச்சி அப்துல் மஜீத் பகுருதீன் அவர்களின் பங்களிப்புடன் கோவை சங்கரா மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இந்த கண் சிகிச்சை முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் அகமது ஹாஜா,மற்றும் அப்துல் மாலீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஹானஸ்ட் லயன் சங்க சாசன தலைவர் குப்பாஷா அகமது கபீர் அவர்கள் வரவேற்றார் அப்போது பேசிய அவர் தொழிலதிபர் அப்துல் மஜீத் பகுருதீன் அவர்கள், பல்வேறு சமூக சேவைகளை ஆற்றி வருகிறார்.
குறிப்பாக உடல் நலன் சார்ந்த உதவிகளுக்கு
தாமாக முன்வந்து உதவிட கூடிய நன்மனிதர் ஆவார், ஒரு மனிதரை வாழ வைத்தவர் முழு சமூகத்தையும் வாழ வைத்தவர் என்கிற இறை மறையின் கூற்றை நிரூபிக்கும் வன்னம் செயலாற்ற கூடியவர்.
அதே போன்றுதான், நாம் கண்சிகிச்சை முகாம் என அவரை அணுகிய போது எந்த வித மறுப்பும் இன்றி முழு செலவையும் ஏற்று கொண்டார் இறைவன் அவருக்கு அருள் புரிவானாக என்றார்.
பின்னர் பேசிய மருத்துவர் சபியூத்தீன், கண் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கும் லயன் சங்கம், எலும்பு உள்ளிட்ட உடலில் பிற நோய் நீக்கவும் பாடுபட வேண்டும் என்றார்.
இந்த சிறப்பு முகாமில், கண்புரை, லெண்ஸ்,பார்வை மங்கள், நீர் வடிதல், கண் அரிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு போக்குவரத்து செலவு உள்ளிட்ட அனைத்தும் கட்டணமில்லாமல் அழைத்து செல்ல இருக்கிறோம் என்பதாக குப்பாஷா அகமது கபீர் தெரிவித்தார்.
இந்த சிறப்பு முகாமிற்கு, NSS மாணவர்கள்,ஹானஸ்ட் தன்னார்வ இளைஞர்கள் குறிப்பாக லயன் ஹானஸ்ட் சங்க இயக்குனர் லயன் முகம்மது அன்சாரி,லயன் ரமீஸ்,லயன் கோபால கிருஷ்ணன், லயன் புரோஸ்கான்,லயன் கமால்,லயன் முகம்மத் அபூபக்கர்,லயன் ஹாஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தமுகாமில்.கலந்து கொண்ட 48பேருக்கு கட்டணமில்லா கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

