தமிழகத்தில் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள், மனிதர்களை தாக்கும்போது அவர்களுக்கு ஸ்க்ரப் டைபஸ் நோய் ஏற்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, மற்றும் தோல் தடிப்புகள் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாதிப்பு காணப்படுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.