அதிரை மேற்கு நகர திமுக செயலாளரும் முன்னாள் சேர்மனுமான அஸ்லம், தனது கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் நல்லுறவை பேணி வருகிறார். அதன் ஒருபகுதியாக பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ, தஞ்சாவூர் எம்.பி முரசொலி, அமைச்சர்கள் கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியது அதிரை அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளானது.

இந்நிலையில் சீனியர் அரசியல்வாதியான திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை இன்று அவரது இல்லத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நகர செயலாளர் அஸ்லம் மற்றும் அதிரை மேற்கு நகர திமுகவினர் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். இந்த சந்திப்பின்போது அதிரை அரசியல் நிலவரம் குறித்து ஏதும் பேசினார்களா என்கிற விபரம் எதுவும் தெரியவில்லை. ஆனால் மேலிட நிர்வாகிகளுடன் அஸ்லம் நல்ல தொடர்பில் இருப்பதையே இது காட்டுகின்றது. முன்னதாக தான் மாவட்ட பொருளாளராக இருந்தபோது அதுவரை குதிரை கொம்பாக இருந்த மாவட்ட பதவிகளில் அதிரையை சார்ந்த 4 பேரை அஸ்லம் அமர செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.