அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதியின் நாம் தமிழர் கட்சியினர் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சியின் சீமான் பெரியார் குறித்த சர்ச்சையான கருத்துக்களை பொது வெளியில் பேசி வருவதால் தி.கவினர் உள்ளிட்ட பெரியாரிஸ்ட்டுகள் கொதிப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர்
முன்னாள்மாவட்ட செயலாளர் தேவராஜ், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் தலைவர் சிவமானிக்கம், துவரங்குறிச்சி வீர தமிழர் முன்னனியின் ஜெயவேல் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் முன்னாள் துணை தலைவர் அதிரை சுஐபுதீன் உள்ளிட்ட நூற்று கணக்கானோர் நாதகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
இதுகுறித்து பேசிய முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ் சீமான் தலைமை பண்பிற்கு லாயக்கற்றவர் என்றும், மேதகு பிரபாகரனை கூட வரும் காலங்களில் தனது அரசியலுக்காக அவதூறுகளை அள்ளி வீச தயங்கமாட்டார் என்றும் நாதகவில் இருப்பவர்களுக்கு உரிய மரியாதை இல்லை என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து சுஐப் கூறுகையில், இஸ்லாம் குறித்தும் அவர்களின் நம்பிக்கை குறித்தும் நாதகவில் தெளிவான கொள்கை இல்லை என்றும், இதில் பயணிப்பவர்கள் நன்கு உணர்ந்திட வேண்டும் என்றார்.
