அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் அரசு விழாக்களில், கூட்டணி கட்சிகளுக்கு அழப்பிதழ் இல்லை என்றும் அரசு இலட்ச்சினையுடன் வெளியாகும் அழைப்பிதழை பார்த்துதான் விழா நடப்பதே தெரிந்து கொள்ள முடிகிறது என்கின்றனர்.
குறிப்பாக நகராட்சி பள்ளி எண் 1ல் நடந்து முடிந்த விழாவில் மருந்துக்கு கூட கூட்டணி கட்சியினர் அழைக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ள நிலையில், மேலத்தெரு சூனா பள்ளி கூடத்தில் நடக்க இருக்கிற அரசு நூற்றாண்டு விழாவில் அப்பகுதிஇன் முன்னாள் மாணவர்கள், கொடையாளிகள், அந்த பள்ளியை புணர்நிர்மாணம் செய்த நல்லுள்ளங்கள் யாரையுமே அழைக்காமல் அரசு விழாவை நடத்த உள்ளனர் என்றும் 2026ல் ஸ்டாலினின் கணவை தகர்க்கும் செயலில் சிலர் ஈடுபடுவதாக கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் வேதனை தெரிவித்தார்.
மேலும், சூனா பள்ளிக்கூடத்திற்கு என நிறைய பொருளாதார உதவிகள் கட்டிட பணிகள்,கணினிகள் குடிநீர் சுத்திகரிப்பு, என முன்மாதிரி பள்ளியாக மாற்றிய பெருமை அப்பள்ளியில் படித்த முன்னாள் இந்நாள் மாணவர்களையே சேரும் பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைய முழு காரணமாக இருந்த மறைந்தப்அ சைபுதின் என்பவரின் குடும்பத்யினரை கூட அழைக்க மனமில்லாமல் திடீர் ஞானோதயம் வந்தது வேதனையின் உச்சம்.என்கின்றனர்.
விழா ஒருங்கிணைப்பாளராக இருக்க எம் பகுதியை சேர்ந்த ஒருவருவருக்கு கூட தகுதியற்றவர்களாகவா உள்ளோம் என்கிறார் துபாயில் உள்ள முன்னாள் மாணவர் ஆதஙகம் தெரிவிக்கிறார்.
கூட்டணிகளை கழட்டிவிட்டு காய் நகர்த்தும் எதுவும் கழகத்துக்கு நல்லதல்ல என்கிறார் பச்சை கட்சியின் பழைய நிர்வாகி ஒருவர்.