அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக போலியோ நோயில் இருந்து மக்களை காக்கும் திட்டத்தை தொடங்கி வெற்றி கண்டுள்ளது.
மேலும் சாலை பாதுகாப்பு, மருத்துவம்,கல்வி உள்ளிட்ட பயனுள்ள திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகிறார்கள்.
அதன்படி அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று நகராட்சியில் இருந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி புறப்பட்டது.
இந்த பேரணியானது சேதுரோடு காலேஜ் முக்கம் தக்வாபள்ளி கடைதெரு போஸ்டாபிஸ் தெரு வழியாக சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது.
முன்னதாக இப்பேரணியை, பட்டுக்கோட்டை காவல் துணை கண்கானிப்பாளர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர்,அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்ட நகராட்சி தலைவர்,துணைத்தலைவர்,ஆணையர் மதன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு காதிர்முகைதீன் பள்ளி,மற்றும் இமாம் ஷாஃபி பள்ளியின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.