சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் வருகின்ற 2-2-2025 அன்று தஞ்சையில் மாபெரும் வக்ஃப் உரிமை மாநாட்டை நடத்த உள்ளது .
தமிழகமெங்கும் உள்ள SDPI கட்சியினர், ஜமாத்தார்கள், வக்பு நில நிர்வாகிகள் என பல்வேறு தரப்புனர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டு திடலுக்கு MKN காதிர் முகைதீன் மரைக்காயர் பெயரை சூட்டி இருக்கிறது SDPI கட்சியின் மாநில தலைமை. என்றார்.
இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில் அதிராம்பட்டினம் MKN ட்ரஸ்டிற்கு சொந்தமான கோடிக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்களை ஏழை மக்களின் கல்விக்காக மறைந்த காதிர் முகைதீன் மரைக்காயர் வழங்கி சென்றுள்ளார், அவரின் சொந்த மாவட்டத்தில் நடைபெறும் இந்த வக்ஃப் உரிமை மாநாட்டு திடலுக்கு அவரின் பெயரை சூட்டுவதுதான் சிறந்தது என்றும், MKN ட்ரஸ்டிற்கு உட்பட்ட பல வக்ஃப் சொத்துக்கள் தனியார்களால் ஆக்கிரமம் செய்யப்பட்டுதாகவும், தக்வா பள்ளிக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள வக்ஃபு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை சுட்டிகாட்டிய SDPIயின் நகர நிர்வாகி வக்ஃப் நிலங்கள் மீட்பில் SDPI கட்சியினர் இனி வரும் காலங்களில் தீவிரமாக களமாடும் என்றார்.