அதிராம்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடப்பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதிய நகராட்சிக்கு மறைந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை வைத்து இன்றைய நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக அதிமுக ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மேலும் புதிய நகராட்சி கட்டிடத்திற்கு மறைந்த கண்ணியம்மிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரையோ அல்லது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரையோ வைக்க வேண்டும் என போர் கொடி தூக்கி வெளி நடப்பு செய்துள்ளனர் அதிமுகவின் உறுப்பினர்களான சேதுராமன்,ராக்கப்பன்,நான்சிபிச்சை ஆகியோர்கள்.
இதுகுறித்து நகர அதிமுக செயலாளர் அவர்களை அதிரை எக்ஸ்பிரஸ் நிரூபர் தொடர்புகொண்டு கேட்டபோது, இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் ஊரில் இஸ்லாமியரின் பெயரை வைக்க முடியவில்லை என்றால், உத்திரபிரதேசத்திலா வைக்க முடியும் என்றார்.