அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தது.
அதிராம்பட்டினம் புதிய நகர் மன்றத்திற்கு காயிதே மில்லத், அல்லது APJ அப்துல் கலாமின் பெயரை வைக்க அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
பெரும்பான்மையான உறுப்பினர்களின் விருப்பபடி அக்கட்டிடத்திற்கு மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரை வைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து அவையில் இருந்து அதிமுக வெளி நடப்பு செய்தது.
இந்த நிலையில் அங்கு SDPI, மற்றும் IUML உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஒப்பமிட்டிருக்கிறார்கள்.
IUML திமுகவின் கூட்டணி என வைத்து கொண்டாலும் SDPI அதிமுக கூட்டணியில் அல்லவா இருக்கிறது?
ஆனால் தலைமையின் முடிவுக்கு மாற்றாக அதிரையில் திமுகவிற்கு ஒத்து போவது எதனால் என SDPI யின் அடிமட்ட தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
வக்பு நில உரிமை மாநாட்டிற்கு முஹல்லா ஜமாத்துக்கள், வக்பு நில நிர்வாகிகள் என கட்சி பேதமில்லாமல் புறப்பட தயாராகும் இச்சூழலில், அதிரை SDPIயின் தடுமாற்றம் தேவையற்றது என புலம்பி வருகிறார்கள் SDPI அபிமானிகள்.