பேரறிஞர் அண்ணா தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க இயலாத ஒருவர், இதனால்தான் அதிமுக,திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அண்ணாவின் புழகை பறைசாற்றி வருகிறது.
அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் அஇஅதிமுகவினர் அண்ணாவிற்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அதன்படி அதிராம்பட்டினம் நகர அதிமுக சார்பில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நகர செயலாளர் பிச்சை மற்றும் கட்சியின் முன்னோடிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் வார்டு கிளை பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.