துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் தமிழக மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு அதிரை, நாகூர், காயல்பட்டினம், பெரியபட்டினம், மதுக்கூர், அத்திக்கடை, பொதக்குடி, கூத்தாநல்லூர், பூதமங்கலம், பனைக்குளம், கீழக்கரை ஆகிய ஊர்களில் இருந்து அணிகள் பங்கேற்கின்றன.
இதில் காலிறுதி,அரையிறுதி என தொடர் வெற்றிகளை குவித்த அதிரை ஃபால்கன் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
அதிராம்பட்டினம் – நாகூர் அணிகளின் ஆக்ரோச ஆட்டத்தை பார்க்க கால்பந்து ரசிகள்கள் மைதானத்தில் குவிந்தனர்.
இறுதியாக கடும் போராட்டத்திற்கு பின்னர் அதிரை 3 கோல்களை போட்டு நாகூரை நடுங்க வைத்தது.
வாய்ப்புகளை லாவகமாக கையாளாமல் நாகூர் அணி இராண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டது.




