Home » அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் கோரிக்கை என்ன?, அரசு தர சம்மதிப்பது என்ன?

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் கோரிக்கை என்ன?, அரசு தர சம்மதிப்பது என்ன?

0 comment

சென்னை: 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

ஊழியர்கள் சார்பில் 46 போக்குவரத்து தொழிற்சங்ககங்களை சேர்ந்த பிரதிநிகள், 8 போக்குவரத்து துறை இயக்குநர்கள், செயலர்கள் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கடந்த 27ம் தேதியும் மிகப்பெரிய அளவில் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழகம் முழுக்க 40,000 மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். 3 வருடங்களுக்கு ஒருமுறை 2.57 சதவீத ஊதிய உயர்வை அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், அரசோ, 4 வருடங்களுக்கு ஒருமுறை 2.44 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.

பேச்சுவார்த்தையின் இறுதியில், 2.44 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் 4வருடங்களுக்கு பதிலாக 3 வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதை ஊழியர் சங்கங்கள் ஏற்கவில்லை.

தொழிலாளர்கள் கேட்கும் சதவீதம் மற்றும் அரசு கொடுக்க சம்மதிக்கும் சதவீதம் நடுவேயுள்ள இடைவெளிதான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter