அதிரை எக்ஸ்பிரஸ்::- ஒவ்வொரு மனிதனும் பிற மனிதனுக்கு உதவி செய்வதே இன்றைய சூழ்நிலையில் கேள்விகுறியாகும் நிலையில் கன்றுக்குட்டிக்கு ஆடு தன்னுடைய மடியில் இருந்து பால் கொடுக்கும் பாசமூட்டும் நிகழ்ச்சி அதிரை புதுத்தெருவில் அன்சாரி அவர்கள் வீட்டில் நடைபெற்றது.
ஆடு,மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அன்சாரி வீட்டில் மனித இனத்திற்கு பாடம் எடுத்த சம்பவம் நமக்கு ஆச்சரியமூட்டியது.பகுத்தறிவற்ற விலங்குகளே வெவ்வேறு இனங்களுக்கு பல்வேறு வகையில் உதவக் கூடிய நிகழ்ச்சி பலநேரங்களில் உதவி செய்து கொண்டு தான் இருக்கின்றன. மனிதர்களும் இன்னொரு மனிதருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை நமக்கு வகுப்பு எடுத்துவிட்டது இந்நிகழ்வு.