Thursday, April 18, 2024

யார் இந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா? மோதலின் பின்னணி என்ன?

Share post:

Date:

- Advertisement -

சினிமா தியேட்டரில் தேசீய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும்” என தேசப்பற்றுக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கியவர் தான் தீபக் மிஸ்ரா. ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா இவருடைய மாமா ஆவார்.

1979 ல் வழக்கறிஞர் ஆக வாழ்க்கையை ஒடிசாவில் துவக்கி, மத்திய பிரதேசம், பீகார் என தலைமை நீதிபதி பொறுப்புகளை வகித்தவர். தீர்ப்புகளில் பண்டைய இலக்கியம், ராமாயணம், மகாபாரதம் எல்லாவற்றிலிருந்தும் கருத்துக்களை சொல்லி தீர்ப்பை வழங்கும் பக்திமான்.

1985 ல், “நான் ஒரு பிராமணன். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எந்தவொரு நிலமும் இல்லை ” என உறுதிமொழி கொடுத்து, இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஓட்டியபொழுது, கட்டாக் மாவட்ட நீதிமன்றம் இவருடைய மோசடியை கண்டு பிடித்து ரத்து செய்த பின்னரும் நிலத்தை ஓட்டிக் கொண்டு இருந்த நீதிமான் ; 2012 CBI விசாரணை போதுதான் இந்த நில மோசடி அம்பலமானது.

அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ பூவ் தற்கொலை கடிதத்தில் தீபக் மிஸ்ரா பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது.

பாஜக RSS பரிவாரத்திற்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான தீர்ப்புகள், வழக்குகள் இவரது கையில் இருந்தது; இருக்கிறது.

Master of Roaster என்று எதேச்சதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டிற்கு வரும் வழக்குகள் அனைத்தும், யாரிடம் போக வேண்டும் என சிலருக்கு சாதகமாக முடிவு செய்கிறார். நீதிமன்ற நிர்வாக நடைமுறைகளை மிதிக்கிறார்.

CJI ஆக பதவி ஏற்ற பின், இவருக்கு அடுத்த சீனியர் நீதிபதியான செல்லமேஸ்வர் , “உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்களை விசாரிக்க SIT ஒன்று அமைப்பது தேவையா ? “என்ற முக்கியமான வழக்கில் 2017 நவம்பரில் 5 பேர் கொண்ட அமர்வு அமைத்தார் ; அதை மறுத்து 3 பேர் கொண்ட அமர்வை தீபக் மிஸ்ரா அதிரடியாக அமைத்தார்.

1)மும்பை வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமன் தூக்கு விவகாரத்தில், அவரது இறுதியான கருணை மனுவை மிக அவசரமாக நள்ளிரவில் விசாரித்து “தூக்கில் போடச் சொன்ன நீதிமான் இவர் தான் ! ”

2)உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ள அயோத்தி பாபர் மசூதி – ராமஜென்ம பூமி நில விவகார வழக்கில் மூன்று பேர் கொண்ட பெஞ்ச் /அமர்வின் தலைவர் இவரே!

3)பாஜக தலைவர் அமித் சா நேரடியாக சம்பந்தப்பட்ட சோராபுதீன் சேக் கொலை வழக்கை விசாரித்து வந்த CBI நீதிபதி லோயா சந்தேகமான முறையில் இறந்தார். லோயா சந்தேக மரணத்தை விசாரிக்க கோரும் வழக்கில் அமித் சா பெயர் அடிபடுகிறது. இந்த வழக்கை ஒரு இளைய நீதிபதியிடம் வழங்கிவிட்டார், தீபக் மிஸ்ரா. இதில் அமித் சாவை பாதுகாக்க தலைமை நீதிபதி முயற்சிக்கிறார் என்பதும் மூத்த நீதிபதிகளின் தற்போதைய குற்றச்சாட்டு ஆகும்.

4) ஏர்செல் மேக்சிஸ் பேர வழக்கின் விசாரணையிலும், இவர் தந்திரமாக விலகி கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...