தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜாமடம் பகுதியில் உள்ள சவுக்கு காட்டில் ஒரு சில தினங்களுக்கு முன்பு 50வயது மதிக்கத்தக்க ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து, அதிரை தமுமுக அவசர ஊர்தி மூலம் அந்த சடலம் அரசு மருத்துவமனை பிணவரைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அந்த நபர் யார் என்று அடையாளம் காண காவல் துறையினர் முயற்சித்தனர். இந்நிலையில் இன்று வரை அவருடைய சொந்தங்கள் என்று கூற யாரும்வராததாலும் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு அதிரை CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் பேரா. செய்யது அகமது கபீர் தலைமையில், அதிராம்பட்டினம் CBD நகர தலைவர் இப்ராஹிம் அலி அவர்களின் முன்னிலையில் மற்றும் அதிரை காவல் துறை அதிகாரிகள் உதவியுடன் இன்று(20/01/2018) மாலை அடக்கம்செய்தனர்.
இந்நிகழ்வின் போது ஆரிப், சமீர், பஹத், அஜ்மீர், ரியாஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.