Tuesday, December 2, 2025

மகாராஷ்டிராவில் மூன்றே நாளில் கவிழ்ந்த பாஜக ஆட்சி !

spot_imgspot_imgspot_imgspot_img

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த திருப்பங்களைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை உருவானது. பாஜக- சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது கை கொடுக்கவில்லை.

சிவசேனா, என்சிபி கட்சிகளுக்கு ஆளுநர் கெடுவிதித்தும் உரிய நேரத்தில் ஆட்சிகள் அமையவில்லை. இதனால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ்-என்சிபி- சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தின. இப்பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து சனிக்கிழமையன்று ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து 3 கட்சிகளும் ஆட்சி அமைக்க உரிமை கோர திட்டமிட்டிருந்தன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக என்சிபியின் அஜித் பவார், பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். இதனால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை 2 நாட்களாக விசாரித்த உச்சநீதிமன்றம், நாளை பட்னாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட்டது.

ஆனால் 162 எம்.எல்.ஏக்கள் என்சிபி-காங்கிரஸ்- சிவசேனா அணியில் இருப்பது திட்டவட்டமானதால் பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து முதலில் துணை முதல்வர் அஜித் பவாரும் அடுத்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் பதவிகளை ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிராவில் 3 நாட்களில் பாஜக அரசு கவிழ்ந்துவிட்டது. இதனையடுத்து சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி இணைந்து புதிய அரசு அமைப்பது உறுதியாகி இருக்கிறது. அக்கூட்டணியின் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனாவின் நிறுவனர் மறைந்த பால்தாக்கரே குடும்பத்தினர் நேரடி அரசியலுக்கு வராமல் இருந்தனர். மகாராஷ்டிராவில் தீர்மானிக்கும் சக்தியாக மட்டும் இருந்தனர். இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அந்த மரபை உடைத்து மகன் ஆதித்யா தாக்கரேவை எம்.எல்.ஏவாக்கினார். தற்போது உத்தவ் தாக்கரேவே முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளார்.

ஏற்கனவே இதேபோன்று கர்நாடகாவிலும் பெரும்பான்மை இன்றி ஆட்சி அமைத்து பாஜகவின் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...
spot_imgspot_imgspot_imgspot_img