Friday, March 27, 2026

மதுக்கூரில் நடைபெற்ற சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) மற்றும் மதுக்கூர் காவல்நிலையம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகில் இன்று (20/10/2018) சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் ஜனாப் TAKA முகைதீன் மரைக்காயர் தலைமை தாங்கினார். மதுக்கூர் வர்த்தக சங்கம் தலைவர், திரு R. பன்னீர்செல்வம் அவர்களும், மதுக்கூர் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு R. மகேந்திரன் அவர்களும், மற்றும் மதுக்கூர் வருவாய் ஆய்வாளர் ஜனாப் S. சேக் உமர்ஷா அவர்களும் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்து நிகழ்ச்சியை துவக்கி வைத்த மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் திரு A.ஆனந்த தாண்டவம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி உரையாற்றினார்.

இதையொட்டி, சாலைகளில் சென்ற வாகனங்களின் முகப்பு விளக்குகளில் நடுவே கருப்பு வில்லைகள் ஒட்டப்பட்டன. மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் மற்றும் பிராச்சாரம் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் ஆர்வலர் M.சேக் முஹம்மது ராவுத்தர்ஷா,ரெட் கிராஸ் சொசைட்டி ஒன்றிய தலைவர் SSB பார்த்திபன்,ரெட் கிராஸ் சொசைட்டி ஒன்றிய செயலாளர் S. கோவிந்தராஜு,வர்த்தக சங்க துணைச் செயலாளர் MSM அப்துல்லாஹ்,மைல்கல் குரூப்ஸ் செயலாளர் M.சேக் அஜ்மல் மற்றும் CBD நிர்வாகிகள் A.அஹமது முஸ்தபா,S.நூர் முஹம்மது,M.நஜீப் அகமது, B.முகமது இம்ரான், H.முஹம்மது இப்ராகிம், M.ரியாஸ் அகமது, A.யூசுப் கான், H. இம்தியாஸ் அகமது, H. அக்பர் மாஹிர், S.நிசாருதீன்,A.அப்துல் மாலிக். அதிராம்ப்பட்டிணம் பகுதிகளின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில், CBD ஆலோசகர் M.கபார் அவர்கள் நன்றியுரையாற்றி நிகழ்ச்சியினை முடித்து வைத்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img