Saturday, March 28, 2026

புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. பலர் வீடுகளை இழந்தும், இருக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். இன்னனும் கூட பல இடங்களில் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றனர். அது மட்டுமின்றி புயலால் பள்ளி மாணவ, மாணவிகளின் நோட்டுப் புத்தகங்களும் சேதமடைந்துள்ள.

இந்நிலையில் மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் புத்தகப்பை, நோட்டுப் புத்தகங்கள், கல்வி சார்ந்த உபகரணப் பொருட்களை சுமார் 100 மாணவ மாணவிகளுக்கு கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக CFI மாநில செயலாளர் ரியாஸ் அஹமது, மாநில பொருளாளர் முகமது, தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஹவாஜா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img