Monday, March 30, 2026

அதிரையில் பேரூர் திமுகழக ஆலோசனைக் கூட்டம் !![படங்கள்]

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என மும்முரம் காட்டி வருகின்றனர். தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பேரூர் திமுக அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூர் திமுகழக செயலாளர் இராம. குணசேகரன் தலைமை தாங்கினார்.

இதில் தஞ்சை தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியில் இருந்து விலகி 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர்.

இக்கூட்டத்தில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர். செல்வம், ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் இதிரீஸ், பேரூர் அவைத்தலைவர் JJ. சாகுல் ஹமீது, துணைச் செயலாளர் அன்சர்கான், மாவட்ட பிரதிநிதி பகுருதீன், துணைச் செயலாளர் முல்லை நாதன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சாகுல் ஹமீது, முன்னாள் கவுன்சிலர்கள் சரீஃப், பசுல்கான் மற்றும் பேரூர் திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

​சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டி: அதிரையை அதிர வைக்கும் புதிய அரசியல்...

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிராம்பட்டினம் பகுதியில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, "அதிராம்பட்டினத்தில் இருந்து ஒரு...

“யார் ஒரிஜினல் மஜக? அரசியல் சொல்லும் உண்மை!”

தமிழக அரசியலில் சிறிய கட்சிகளின் பிளவுகள் புதியதல்ல. ஆனால், அந்த பிளவுகள் எப்போது “தனிநபர் அதிகாரப் போராட்டம்” ஆக மாறுகின்றனவோ, அப்போது அதன்...

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில்...
spot_imgspot_imgspot_imgspot_img