Saturday, February 7, 2026

அதிரை : பொறுப்பற்ற மின்வாரியத்தால் பொதுமக்கள் அவதி !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் மின்சார வாரியத்தின் பொறுப்பற்ற தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

நள்ளிரவு கடந்துவிட்டால் மின்சார வாரிய அதிகாரிகள் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை யாரையும் இலகுவாக தொடர்பு கொள்ளவே இயலாத அளவுக்கு ஃபுல் டைட்.

04373 242444 என்ற தரைவழி தொடர்பு எண்ணும் தண்ணீர் அடித்தார் போல் 24 மணிநேரமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது வேதனையிலும் வேதனை.

மின்தடை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து நுகர்வோர்கள் தெரிந்துகொள்ள மின்வாரியத்தை தொடர்புகொள்ள இயலவில்லை என நுகர்வோர்கள் புகார் அளிக்கின்றனர்.

பாதையில் மின் கம்பி அறுந்து விழுந்தால் கூட போதையில் இருக்கும் மின்வாரிய ஆசாமிக்கு எவ்வாறு தெரிவிப்பது என ஆவேசப்பட்டார் மின் தடையால் தூக்கமிழந்த நுகர்வோர் ஒருவர்.

தமிழக அரசே மின் வாரிய அதிகாரிகளே மின் விநியோக சாதனங்களில் திடீர் பழுது ஏற்படுவது இயற்கை. ஆனால் நுகர்வோர்களுக்கு முறையாக விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதை மறவாதீர்.

இனிமேலாவது மரணித்துபோன தரைவழி தொலை பேசிக்கு உயிர் கொடுங்கள். மதுக்கூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு இருக்கும் பொறுப்புணர்வு கூட அதிரை அதிகாரிகளுக்கு இல்லாமல் போனது ஏனோ ?

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img