Sunday, December 14, 2025

அதிரை முஹம்மது தம்பிக்கு அதிமுக நிர்வாகி கொலை மிரட்டல் – PFI கடும் கண்டனம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை முஹம்மது தம்பிக்கு அதிமுகவினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் அதிரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் முஹம்மது ஜாவித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிரையை சேர்ந்தவர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி. இவர் பாப்புலர் ஃப்ரண்டின் நகர செயற்குழு உறுப்பினர் ஆவார். இவர் பல ஆண்டுகளாக அதிரையில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகளில் இவரின் பங்களிப்பு சிறப்பானது.

சுகாதாரத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் பல இடங்களில் இவரின் சேவைக்காக பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

இவரின் வளர்ச்சியைப் பிடிக்காத ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி காரர்கள் அரசியல் ஆதாயத்திற்காக நேரடியாக கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு சென்றுள்ளனர்.

அதிரையை சேர்ந்த அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகி அஜீஸ் என்பவர் நேரடியாக இவரிடம் “நீ முஹல்லாவுடன் சேர்ந்து செய்யும் பணிகளை நிறுத்த வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்” என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்காக தி.மு.க வை சேர்ந்த முன்னாள் சேர்மனும் எங்களுடன் உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

இதை பாப்புலர் ஃப்ரண்ட் வண்மையாக கண்டிப்பதுடன் மேலும் அதிமுக மாவட்ட நிர்வாகம் இது விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...

அதிராம்பட்டினம்: அரசுப் பணி சாதனையாளர்களுக்கு விருது – வட்டாட்சியர் சிறப்பு!

அதிராம்பட்டினம் அபுல்கலாம் ஆசாத் கோச்சிங்: TNPSC வெற்றியாளர்களுக்கு விருது விழாஅதிராம்பட்டினம், டிச.14: மௌலானா அபுல்கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர் சார்பில் TNPSC தேர்வுகளில்...

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img