Saturday, March 28, 2026

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தஞ்சை, பெரம்பலூர், காஞ்சிபுரம், தென்காசி ஆகிய நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ், பெரம்பலூர் எஸ்பியாக பிரபாகர் ஐபிஎஸ், காஞ்சிபுரம் எஸ்பியாக ஜவஹர், தென்காசி எஸ்பியாக மயில்வாகனன் ஐபிஎஸ் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தஞ்சை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!

தஞ்சை மாவட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்...
spot_imgspot_imgspot_imgspot_img