பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்
எழுச்சிமிகு வரவேற்பு
பிரச்சாரத்திற்காக பட்டுக்கோட்டை வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தும் உற்சாகப்படுத்தினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்களின் வருகை அதிக அளவில் காணப்பட்டது. தொண்டர்கள் கைகளில் கட்சிப் கொடிகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பியபடி கூட்டத்தில் பங்கேற்றது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
இக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர் அண்ணாதுரை அவர்களுக்கு ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்களித்து ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் பெரும் வெற்றியைத் தேடித்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசின் சாதனைகளையும், பட்டுக்கோட்டை தொகுதிக்கான எதிர்காலத் திட்டங்களையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரம், தொகுதி முழுவதும் தி.மு.க-வினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.






















