Saturday, March 28, 2026

அதிரையில் சாலை மறியல்., குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக தீர்மானம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கஜா புயல் கோரதாண்டவம் ஆடியது அனைவரும் அறிந்ததே. இதனால் தஞ்சை, திருவாரூர் போன்ற பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். டெல்டா மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து தவித்தனர்.
இந்நிலையில், பல்வேறு தன்னார்வல அமைப்புகளும், சென்னை போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தங்களின் சிறிய தொகையை கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு நிவாரணங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டது.

அதில், வீடுகளை இழந்த மற்றும் பாதிப்பிற்குள்ளலான பொதுமக்களுக்கு வங்கியின் மூலம் அரசின் நிவாரணமாக பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

ஆனால், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெரு மற்றும் மாரியம்மன் கோவில் தெரு வாசிகளின் வங்கியில் பணம் வரவில்லை என்றும், அரசின் நிவாரண பொருட்கள் சரிவர வழங்கவில்லை என்றும் பொதுமக்கள் இன்று(27/12/2018) பகல் 12மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

நிவாரண பொருட்களை சரியான முறையில் சேராத காரணத்தால் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், இந்த சாலை மறியல் நிவாரணம் வழங்கும் வரை தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி, இதற்கான சரியான நடவடிக்கை இல்லையெனில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் தங்களுடைய குடும்ப அட்டைகளை திருப்பிக்கொடுக்கும் போராட்டம் நடத்துவதாகவும் கூறினர்.

வீடியோ இணைப்பு:-

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img