Sunday, March 29, 2026

புதுப்பட்டினத்தில் TNTJ சார்பில் பேரிடர் கால ரத்ததான முகாம் !

spot_imgspot_imgspot_imgspot_img

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் பேரிடர் கால இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 130வது பேரிடர் கால இரத்ததான முகாம் தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் அளித்தனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குருதி பரிமாற்ற அலுவலர் Dr. வேல்முருகன் மற்றும் ரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் ஆகியோர் தானமாக வழங்கப்பட்ட ரத்தத்தை பெற்றுக்கொண்டனர்.

இம்முகாமில் புதுப்பட்டினம் ஜமாத்தார்கள், தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட துணை செயலாளர் பாவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கிளை தலைவர் ஹபீப் முகமது, துணைத்தலைவர் முகமது உசேன், துணை செயலாளர் சதக்கத்துல்லா, மாணவரணி சாகுல், மருத்துவரணி நபீல் மற்றும் செந்தலைப்பட்டினம் மருத்துவரணி பாரீஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...
spot_imgspot_imgspot_imgspot_img