Saturday, March 28, 2026

அதிரை பேரூராட்சி செயல் அலுவலருக்கு ADC சார்பில் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரை இன்று அதிரை தன்னார்வலர் அப்துல் மாலிக் சந்தித்து, கடற்கரைத்தெருவில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள மனுவில் நிறைவேற்றப்படாமல் உள்ளவற்றை விரைந்து செய்து தர கோரிக்கை விடுத்தார்.

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு சார்பாக கடந்த ஆண்டு அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் குடிநீர் பிரச்சனை, டைமர் ஸ்விட்ச், சாலை அமைத்தல், குப்பைகளை முறையாக அகற்றுதல், மின் கோபுர விளக்கு ,நாய் தொல்லை, வடிகால் பிரச்சனை உள்ளிட்டவற்றை சரிசெய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று சமூக ஆர்வலர் மாலிக் அளித்த மனுவில், கடற்கரைத்தெருவில் குடிநீர் பிரச்சனை, டைமர் ஸ்விட்ச், சாலை அமைத்தல், குடிநீர், குப்பைகளை முறையாக அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது அதனை அடுத்து நாய் தொல்லை மற்றும் வடிகால் பிரச்சனை மட்டும் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும், அதனையும் விரைந்து சரிசெய்து தர வேண்டும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனுவாக கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட செயல் அலுவலர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இறுதியாக அதிரை பேரூராட்சி செயல் அலுவலருக்கு அதிரை தாவா சென்டர் சார்பாக திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...
spot_imgspot_imgspot_imgspot_img