Friday, March 27, 2026

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில் கடும் போட்டி!

spot_imgspot_imgspot_imgspot_img

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட நகரங்களை கொண்டுள்ள
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் தேர்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட யார் தேர்வாகிறார்கள் என்பது குறித்து கட்சிக்குள் கடும் போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

முக்கிய போட்டியாளர்கள் யார்?

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் சூரப்பள்ளம் விஜயகுமார், பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பார்த்திபன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட் ஆகியோர் வேட்பாளர் ரேசில் இருக்கின்றனர்.

மேற்கண்ட மூவரின் பின்புலம், கட்சிப்பணி மற்றும் இவர்களுக்கு தொகுதியில் உள்ள செல்வாக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என கூறப்படுகிறது.

மூன்று பேரும் சீட்டுக்காக கடும் முயற்சி செய்து வரும் நிலையில்
“யாருக்கு டிக்கெட்?” என்ற கேள்வி தற்போது உடன்பிறப்புகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களிலும்,
தொண்டர்களிடையிலும்,
அரசியல் வட்டாரங்களிலும்
இதுகுறித்து தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இவர்களில் பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்ற தகவலும் நேற்று முதல் கட்சியினரிடையே பரவி வருகிறது.

திமுக தலைமையிலிருந்து
விரைவில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அறிவிப்பு வெளியாகும் வரை
பட்டுக்கோட்டை தொகுதியின் அரசியல் சூடு மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img