Saturday, March 28, 2026

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!

spot_imgspot_imgspot_imgspot_img

நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம் மொத்தம் 175 இடங்களில் நேரடியாக களம் இறங்குகிறது.

இந்நிலையில் திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் திமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதன்படி பட்டுக்கோட்டை பகுதியில் சிட்டிங் எம்எல்ஏவான கா. அண்ணாதுரை மீண்டும் களம் இறங்குகிறார்.

பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிப்பதற்கு திமுகவில் பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்த நிலையில், மீண்டும் சிட்டிங் எம்எல்ஏவான கா. அண்ணாதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பட்டுக்கோட்டை தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 1989-91 மற்றும் 2021-2026 ஆகிய ஆண்டுகளில் பட்டுக்கோட்டை எம்எல்ஏவாக அண்ணாதுரை பணியாற்றியுள்ளார்.

அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சி.வி. சேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக இம்முறை தனது சிட்டிங் எம்எல்ஏவான கா அண்ணாதுரைக்கு வாய்ப்பு அளித்துள்ளதால், பட்டுக்கோட்டை தொகுதியில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில்...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில்...

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை...
spot_imgspot_imgspot_imgspot_img