Sunday, February 1, 2026

​பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பாலியல் குற்றங்களின் புள்ளிவிவரங்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் புள்ளி விவரங்களை, தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau) சமீபத்தில் வெளியிட்டது. கடந்த 2016 இல், குழந்தைகளுக்கு எதிராக நடந்த அனைத்து பாலியல் குற்றங்களையும் பட்டியலிட்டுள்ளது அந்த அமைப்பு. பெண்குழந்தைகள் மட்டுமல்லாமல், ஆண்குழந்தைகளும் இம்மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தேசிய குற்ற ஆவணப் பணியகம்  வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி..,

பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ள 16,863பெண்கள் , பதினெட்டு வயதிற்கு மேல் உள்ள22,205 பெண்கள் என மொத்தம் 39,068 பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், 3,057 ஆண்  குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

ஆண்டு ஒன்றிற்கு 1.1லட்சம் குழந்தைகள் பல்வேறு குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில், 33% பேர் பாலியல் ரீதியான பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல்,
6 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் 1.3% பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 4.1% பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 15.6% பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
16முதல் 18வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 22.2% பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!

​அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால்,...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr....

​மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt....
spot_imgspot_imgspot_imgspot_img