Thursday, March 26, 2026

தமிழ்நாடு மீனவ பேரவையின் சார்பில் மல்லிப்பட்டிணம் கிராம சபா கூட்டத்தில் மனு அளிப்பு!!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக அரசால் கடந்த 19.02.2016 அன்று வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் என்று கூறி கூட்டத்திற்கு ஒத்து போகாத வரைபடங்களை மட்டும் வெளியிட்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பானை (EIA) – 2016ன்- மாவட்ட வாரியாக மக்கள் கருத்து கூட்டத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டம் 25.04.2018 அன்று பட்டுக்கோட்டையில் நடக்க இருப்பதாக வெளியிடப்பட்டது. கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் (DZMB) கடற்கரை ஒழுங்கு முறை மண்டல அறிவிப்பானை (CRZ)-11 பிரிவு-5 இணைப்பு-1 ல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி செய்து முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழக அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் (DCZMP) என்று கூறி சட்டத்திற்கு ஒத்து போகாத வரைபடங்கள் கடற்கரை மண்டல மேலாண்மை அறிவிப்பானை (CRZ)-11ல் பிரிவு-5 இணைப்பு-1ல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் வெளியிடப்பட்டுள்ளது.

மீனவ கிராமங்களின் பொது சொத்துக்கள் மீனவ சமுதாயத்தின் சமூக கட்டமைப்புகள் பாதிப்பு ஏற்படலாகும்.மேலும் சாகர் மாலா திட்டத்தை கைவிட வலியுறுத்தியும்,பொதுமக்கள், மீனவர்களின் சொத்துகளை ஒருபோதும் காலிசெய்ய நாங்கள் அனுமதிக்க முடியாது,காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் என்பதையும் கூட்டத்தில் வலியுறுத்தி கிராம நிர்வாகிக்கு தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக மனு அளித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img