Thursday, March 19, 2026

போதையால் பாதை மாறும் தமிழகம் !

spot_imgspot_imgspot_imgspot_img

போதைப்பொருள் , சமூகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு கொலைகாரனை போன்றது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் பயன்பாடு. அந்த கொடிய போதை என்னும் அரக்கன் இன்று தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது என்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைபொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்பது அரசுகளின் கடமையாக உள்ளது.

போதைப்பொருட்களை பயன்படுத்துதல் , போதைப்பொருட்களை கடத்துதல் , போதை பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. தினமும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஹெராயின் , அபின் , கஞ்சா உள்ளிட்ட பலவகையான போதைப்பொருட்கள் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தி , அவர்களை மட்டுமல்லாமல் , தங்களை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சீரழிக்கின்றனர். சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவுக்கு , அதற்கு அடிமையாகி உள்ளனர்.

இன்றைய சூழலில் தமிழகத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவது என்பது வருத்தமான விஷயம். இம்மாதிரியான மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி அப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் புறவாசல் வழியாக இன்றளவும் தேசிய நெடுஞ்சாலைகளில் மது விற்பனை நடைபெறுகிறது. தமிழகத்தில் இன்று நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு மது தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

குட்கா , பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இன்றளவும் இயல்பாகவே கிடைக்கின்றன. தமிழகத்தில் இன்று ஐந்தில் நால்வர் ஏதாவது ஒரு போதை பொருளுக்கு அடிமையானவராக இருக்கின்றார்.

தமிழகத்தில் மிகப்பெரிய மனித ஆற்றலும் பொருளாதாரமும் இந்த போதையினால் வீணடிக்கப்படுகிறது. எத்தனையோ பல குடும்பங்களில் நிலவும் பிரச்சனைகளுக்கு இந்த போதையே அடிப்படை காரணியாய் திகழ்கிறது. இந்த தீய போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள தமிழக பள்ளி , கல்லூரி மாணவர்களும் போதை வஸ்துக்களை உட்கொள்பவர்களும் திருந்தப்போவது என்றோ ?

ஆக்கம் : அன்சர்தீன்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!

​அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால்,...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr....

​மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt....
spot_imgspot_imgspot_imgspot_img