Sunday, February 1, 2026

முழு அடைப்பிற்கு மத்தியிலும் உயர்ந்த பெட்ரோல்,டீசல் விலை : பொதுமக்கள் அதிர்ச்சி!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியா முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையிலும் பெட்ரோல் , டீசல் விலையில் இன்றும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

விலை உயர்ந்தது.. இதுமட்டும்தான் பெட்ரோல் , டீசல் விலையில்கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டே உள்ளது. ஒரு பைசா கூட கடந்த சில நாட்களில் பெட்ரோல் டீசல் விலையில் குறையவில்லை.

ஒரு பக்கம் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. தினமும் பைசா கணக்கில் பெட்ரோல் , டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.

பெட்ரோல் , டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று பிரதமர் மோடி கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இன்று மீண்டும் பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்தது. தொடர்ந்து உயர்ந்துவருவதை பார்த்தால் இன்னும் சில தினங்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தொடவும் வாய்ப்புள்ளது.

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்தது. டீசல் விலை 23 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91ஆகும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.98 ஆகும்.

இந்நிலையில் பெட்ரோல் , டீசல் விலை உயர்விற்கு எதிராக இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img