Friday, March 27, 2026

மக்களின் உயிரை காவு வாங்க காத்திருக்கும் மின்கம்பிகள்…நடவடிக்கை எடுக்குமா அதிரை மின்வாரியம் ?

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மழவேனிற்காடு தெற்குத் தெரு கிராமத்தில் மின் கம்பங்கள் இல்லாமல் மின் கம்பிகள் தொங்குகின்றன. அப்பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அதிகம் சென்று வரக்கூடிய பகுதியாகும்.

இதுபோல் மின்கம்பம் இன்றி தொங்கும் மின்கம்பிகளால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இம்மின்கம்பிகளால் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் உயிரிழக்கின்றன. அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் பலமுறை சென்று அதிகாரிகளிடம் புகார் அளித்துவிட்டோம். ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

எனவே இவ்விஷயத்தில் அலட்சியம் செய்யாமல் அதிரை மின்வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தூக்கத்திலிருக்கும் அதிரை மின்வாரியம் விழிக்குமா ?

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img